முக்கியம்: Search, Maps, Shopping, Flights, ஹோட்டல்கள், Translate, News உள்ளிட்ட Google Search சேவைகளுக்கான அமைப்புகளை நாங்கள் தற்போது மாற்றி வருகிறோம். இந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ள அமைப்புகள் மாற்றப்படுவதால் தற்போது உங்களுக்குக் காட்டப்படும் அமைப்புகளுடன் பொருந்தாமல் போகலாம். மாற்றப்பட்ட அமைப்புகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
account.google.com தளத்தில் அல்லது உங்கள் Search சேவைகள் ஆப்ஸின் சமீபத்திய ஆப்ஸ் பதிப்பில் நேரடியாக உங்களின் மாற்றப்பட்ட தனியுரிமை அமைப்புகளைப் பார்க்கலாம் நிர்வகிக்கலாம். ஆப்ஸின் சமீபத்திய பதிப்புகள் Google Play Store அல்லது Apple App Storeரில் கிடைக்கின்றன.
Google Assistant, Google TV, Google Store, டெவெலப்பர்களுக்கான Google, Google உதவி மையம் போன்ற சில Google சேவைகளில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளை இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு உங்கள் Google கணக்கில் சேமிக்கும். உதாரணமாக, சிறந்த பரிந்துரைகளைக் காட்டவோ நீங்கள் எங்கிருந்து தேடினீர்களோ அந்தப் பொதுவான இடத்திற்குத் தொடர்புடைய முடிவுகளைக் காட்டவோ உங்களின் முந்தைய தேடல்களையும் சேமிக்கப்பட்ட இடங்களையும் Google Assistant பயன்படுத்தலாம். எப்போது வேண்டுமானாலும் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை ஆஃப் செய்யலாம், கடந்தகாலச் செயல்பாடுகளை நீக்கலாம்.
இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை இயக்குதல் அல்லது முடக்குதல்
- கம்ப்யூட்டரில், எனது செயல்பாடுகள் அமைப்புகளுக்குச் செல்லவும். உங்கள் Google கணக்கில் உள்நுழையும்படி கேட்கப்படலாம்.
- இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை ஆன்/ஆஃப் செய்யவும்.
- இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு இயக்கப்பட்டிருந்தால்:
- "Chrome செயல்பாடுகளையும் Google சேவைகளைப் பயன்படுத்தும் தளங்கள், ஆப்ஸ், சாதனங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளும் செயல்பாடுகளையும் சேர்" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியை நீங்கள் தேர்வுசெய்யலாம்.
- "குரல் மற்றும் ஆடியோ செயல்பாட்டைச் சேர்" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியை நீங்கள் தேர்வுசெய்யலாம்.
- இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை நீங்கள் முடக்கும்போது:
- முடக்கு என்பதைத் தேர்ந்தெடுத்த பிறகு, முடக்கு அல்லது முடக்கி செயல்பாட்டை நீக்கு என்பதைத் தேர்வுசெய்யவும்.
- முடக்கி செயல்பாட்டை நீக்கு என்பதைத் தேர்வுசெய்தால், எந்தச் செயல்பாட்டை நீக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து உறுதிசெய்ய அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.
உதவிக்குறிப்பு: சில உலாவிகளிலும் சாதனங்களிலும் கூடுதல் அமைப்புகள் இருக்கலாம். அவை இந்தச் செயல்பாடு சேமிக்கப்படும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
'எனது Google செயல்பாட்டில்' இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டைக் கண்டறிதல் நீக்குதல்
எனது செயல்பாடுகள் என்பதில் உங்கள் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டைக் கண்டறியலாம் நீக்கலாம்.
- செயல்பாடுகளை நேரடியாக நீக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
- தானியங்கு நீக்குதலை அமைப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
உதவிக்குறிப்பு: கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்க, ‘எனது செயல்பாடுகள்’ பக்கத்தில் உங்கள் செயல்பாடுகளின் விவரங்கள் முழுவதையும் பார்க்க கூடுதல் சரிபார்ப்புப் படி தேவைப்படும்படி நீங்கள் அமைக்கலாம்.
இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு என்று சேமிக்கப்படுபவை எவை?
உங்கள் செயல்பாடு குறித்த தகவல்கள்இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு ஆன் செய்யப்பட்டிருக்கும்போது இவை போன்ற தகவல்களை Google சேமிக்கும்:
- Google Assistant, Google TV, Google Store, டெவெலப்பர்களுக்கான Google, Google உதவி மையம் போன்ற சில Google தயாரிப்புகளிலும் சேவைகளிலும் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள்
- உங்கள் மொழி, பரிந்துரைப்பவர், நீங்கள் பயன்படுத்துவது ஆப்ஸா பிரவுசரா, நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தின் வகை போன்ற உங்கள் செயல்பாடுகளுடன் தொடர்புடைய தகவல்கள்.
- நீங்கள் சாதனத்தைப் பயன்படுத்தும் பொதுவான பகுதி, IP முகவரி ஆகியவற்றின் மூலம் பெறப்படும் உங்கள் இருப்பிடம் பற்றிய தகவலும் செயல்பாடுகளில் அடங்கலாம். இருப்பிடங்கள் பற்றி அறிக.
- நீங்கள் கிளிக் செய்யும் விளம்பரங்கள் அல்லது விளம்பரதாரரின் தளத்தில் வாங்கும் பொருட்கள்.
- நிறுவப்பட்டுள்ள ஆப்ஸ், தொடர்புப் பெயர்கள் போன்ற உங்கள் சாதனத்தில் உள்ள தகவல்கள்.
- நீங்கள் ஆன் செய்ய நினைக்காதபோதும் தற்செயலாக ஆன் செய்யப்படுவதை Google Assistant கண்டறிவது உள்ளிட்ட Assistant செயல்பாடுகள்.
உதவிக்குறிப்பு: நீங்கள் ஆஃப்லைனில் இருக்கும்போதும் செயல்பாடுகள் சேமிக்கப்படலாம்.
இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு ஆன் செய்யப்பட்டிருக்கும்போது, பின்வருபவை போன்ற கூடுதல் செயல்பாடுகளை நீங்கள் சேர்க்கலாம்:
- விளம்பரங்களைக் காட்டுவதற்காக Googleளுடன் பார்ட்னராக இருக்கும் தளங்களும் ஆப்ஸும்
- Google சேவைகளைப் பயன்படுத்தும் தளங்களும் ஆப்ஸும் (Googleளுடன் ஆப்ஸ் பகிரும் தரவு உட்பட)
- உங்கள் Chrome பிரவுசிங் பதிவுகள்
- பேட்டரி நிலை, சிஸ்டம் பிழைகள் போன்ற Android உபயோகம் & பிழை கண்டறிதல் தொடர்பான தகவல்கள்
இந்தத் தகவல்களை Google சேமிக்க வேண்டுமானால்:
- இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- "Chrome செயல்பாடுகளையும் Google சேவைகளைப் பயன்படுத்தும் தளங்கள், ஆப்ஸ், சாதனங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளும் செயல்பாடுகளையும் சேர்" என்பதற்கு அடுத்துள்ள பெட்டி தேர்வுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.
Chrome பிரவுசரில் உள்நுழைந்திருந்து உங்கள் பதிவுகளின் ஒத்திசைவை ஆன் செய்திருந்தால் மட்டுமே Chrome செயல்பாடுகள் சேமிக்கப்படும். Chrome பிரவுசரில் உள்நுழைவது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
கவனத்திற்கு: பலர் பயன்படுத்தும் சாதனத்தை நீங்கள் பயன்படுத்தினாலோ ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகள் மூலம் உள்நுழைந்தாலோ நீங்கள் பயன்படுத்தும் பிரவுசர் அல்லது சாதனத்தில் இருக்கும் இயல்புக் கணக்கில் செயல்பாடுகள் சேமிக்கப்படலாம்.
When Web & App Activity is on, you can include audio recordings from your interactions with Google Assistant as part of your activity. Learn about audio recordings.
இந்தத் தகவல்களை Google சேமிக்க வேண்டுமானால்:
- இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- "குரல் மற்றும் ஆடியோ செயல்பாட்டைச் சேர்" என்பதற்கு அடுத்துள்ள பெட்டி தேர்வுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.
சேமிக்கப்பட்ட உங்கள் செயல்பாடு எப்படிப் பயன்படுத்தப்படுகிறது?
இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு ஆன் செய்யப்பட்டிருக்கும்போது, உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள உங்கள் செயல்பாடு, பிற தரவு போன்றவற்றின் அடிப்படையில் உங்களுக்கு ஏற்ற Google Assistant முடிவுகளைப் பெறுவீர்கள். மிகவும் தொடர்புடைய, பயனுள்ள தகவல்களை வழங்க முடிந்தால் மட்டுமே உங்கள் முடிவுகளில் பிரத்தியேகமாக்கம் பயன்படுத்தப்படும். பிரத்தியேகமான முடிவுகளை Google எப்படிக் காட்டுகிறது என்பதையும் அவற்றை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பதையும் இந்தப் பக்கம் விவரிக்கிறது.
இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு ஆன் செய்யப்பட்டிருந்தால், Google இந்தத் தரவைப் பயன்படுத்தி உங்கள் ஆர்வங்களைப் புரிந்துகொண்டு மிகவும் பிரத்தியேகமான அனுபவங்களை உங்களுக்கு வழங்க முடியும். Google இந்தத் தரவைப் பயன்படுத்தி தனது சேவைகளை உருவாக்கலாம் மேம்படுத்தலாம், தடங்கல்களைக் கண்காணிக்கலாம், மோசடி மற்றும் தவறான பயன்பாட்டைத் தடுக்கலாம்.
சேமிக்கப்பட்ட உங்கள் செயல்பாடுகளை Google எப்படிப் பயன்படுத்துகிறது என்பதையும் அதைத் தனிப்பட்டதாக வைத்திருக்க எப்படி உதவுகிறது என்பதையும் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
தேடல் வினவல்களை Google பொதுவாக எப்படிக் கையாளுகிறது என்பதைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, தனியுரிமைக் கொள்கை தொடர்பான பொதுவான கேள்விகள் பக்கத்தைப் பார்க்கவும்.
கணக்கிலிருந்து நீங்கள் வெளியேறிய பிறகு இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு எப்படிச் செயல்படுகிறது?
Your experiences and ad results may be customized using your activity even if you're signed out. To turn off this kind of customization, you can search and browse privately. Learn how to browse in Incognito mode.
பிரவுசர் பதிவுகள்
சாதனத்தில் உங்கள் செயல்பாடுகளைச் சேமிக்க வேண்டுமா என்பதைக் கட்டுப்படுத்த:
-
பிரத்தியேகமாக்க அமைப்புகளுக்குச் செல்லவும்.
- "Chrome செயல்பாடுகளையும் Google சேவைகளைப் பயன்படுத்தும் தளங்கள், ஆப்ஸ், சாதனங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளும் செயல்பாடுகளையும் சேர்" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.
நீங்கள் மேற்கொள்ளும் தேடல்களையும் பார்வையிடும் தளங்கள் குறித்த விவரங்களையும் உங்கள் பிரவுசர் சேமிக்கக்கூடும். இவற்றில் உங்கள் பதிவுகளை நீக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்:
தொடர்புடைய தகவல்கள்
- உங்கள் கணக்கில் இருந்து தரவை நீக்க Google எப்படி உதவுகிறது?
- 'எனது செயல்பாடுகள்' மூலம் உங்கள் Google தரவை நிர்வகித்தல்
- உங்கள் செயல்பாடுகளை நீக்குதல்
- உங்கள் Google கணக்கில் உள்ள தகவல்களைக் கண்டறிதல், கட்டுப்படுத்துதல், நீக்குதல்
- உங்கள் கணக்கில் உள்ள செயல்பாடுகளை அணுகுதல் & கட்டுப்படுத்துதல்
- உங்கள் Google Play Store அனுபவத்தைப் பிரத்தியேகமாக்குதல்